கிரிக்கெட் -
- இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொண்டிருக்கும் இன்னுமொரு தொழில். [முதல் தொழில் - சினிமா] உலகப் போட்டியின் மூலம் ஏறக்குறைய 1476 கோடி ரூபாய்கள் ICC -க்குக் கிடைக்கும் எனவும், இதை நடத்துவதற்கு வெறும் 571 கோடி செலவு எனவும், இதில் 45 கோடிக்கு வரிவிலக்கு இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது என்பது செய்திகளில் வெளிவந்திருக்கிறது.
- மொஹாலி - போர்
- இந்தியப் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப் பெரிய அளவிற்கு அல்லது கிரிக்கெட்டை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கிறது.
- இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு, முகேஷ் அம்பானி மட்டும் 5 கோடி செலவு செய்து மூன்று corporate Box பதிவு செய்திருக்கிறார்.
- அன்று 10 seconds விளம்பரம் செய்ய 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பத்து நிமிட விளம்பரத்திற்கு இவ்வளவு என்றால் மொத்தம் எவ்வளவு வருமானம் என்று நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு இருக்கும் என்பதால் இது அவ்வளவு முக்கியத் துவம் பெற்று எவ்வளவும் செலவு செய்யத் தயாரயிருக்கிரார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
- அரசியல் தளத்தில் - இரு நாட்டு பிரதமர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று முக்கிய காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அங்கே அணிவகுத்து இருக்கிறார்கள். திரைப் படத் துறையில், அமீர் கான், ப்ரீத்தி, ஷில்பா ஷெட்டி, நம்ம ஊரு தனுஷ் என்று பலரும் இந்தப் போட்டிக்கென பதிவு செய்து நேரடியாக கண்டிருக்கிறார்கள்.
- அப்படி என்ன இந்தப் போட்டிக்கு அப்படி முக்கியத் துவம்?
- முதலாவது இது ஒரு போர்.
- இரு நாடுகளுக்கு இடையிலான போர். முன்பெல்லாம் அல்லது இப்போதும் வேறு பகுதிகளில் நடப்பது போலல்லாமல், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், அவர்களது பிரதிநிதிகள் கிரிக்கெட் விளையாண்டு, வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து கொள்வார்கள்.
- இந்தப் போட்டியின் வழியாய் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானை அடக்கி விட்டது. இனிமேல் பாகிஸ்தானின் பிரதமே, இந்தியப் பிரதமர் சொல்வதையெல்லாம் கேட்பார்.
- இரண்டாவது - இதனால் இது நாட்டின் தேசப்பற்றை வெளிப் படுத்தும் இடமாகி விட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்பிருக்கிறது என்று யாராவது சொன்னால் உடனே அவன் செத்தான். ஒருவேளை அவன் இஸ்லாமியனாக இருந்து விட்டால் அவ்வளவுதான்.
- நடிகர் ஆர்யா ஏதோ சொல்லப் பொய் வம்பில் மாட்டிக் கொண்டார். உடனே இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இப்படி வக்காளத்து வாகுவது நல்லதல்ல என்று பெரிய தேசத் துரோக அளவுக்குப் போய் விட்டது. நல்ல வேளை அவர் ஒரு இஸ்லாமியராக இல்லை. தப்பித்தார். இப்படி அவர் சொன்னது நடந்திருந்தால், அவ்வளவுதான், நான் கடவுள் - கிழித்திருப்பார்கள். பிரதமர் வரை செய்தி போய், கிரிக்கெட் சூதாட்ட முக்கியப் புள்ளியாக, விளையாட்டின் முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த புள்ளியாக அவர் மீது வழக்கிட்டு உள்ளே வைத்திருப்பார்கள். இப்போது ஆர்யா தப்பித்தார்.
- அதாவது இன்றைய இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிக்காட்ட ஒரே இடம் - கிரிக்கெட்தான். கிரிக்கெட்டில் பற்றில்லாதவர்கள் தேசத்தில் பற்றில்லாதவர்கள்.
- மூன்றாவது, நாம் நாகரிகமானவர்களாகி விட்டோம்.
- discovery Chanel - லில், சிங்கம் ஓடிச் சென்று மானைப் பிடித்து இழுத்து அறுக்கும் போது எனக்கு குலையே நடுங்கி விடும் என்று இன்றைய உலகில் பல பேர் சொல்லுவார்கள். சில பேர் அதில் லயித்து இருப்பதும் உண்டு. அடிப்படையில் நம் எல்லாரிடமும், இந்த லயித்துப் போகும் மன நிலை இருக்கும். மனிதன் மனிதனை வெட்டிக் கொன்ற காலம் இப்போது நினைத்தாலும், நாம் அநாகரிக மனிதர்கள் என்று சொல்லுவோம். அதிலிருந்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகம் அடைந்திருக்கிறோம்.
- இருந்தாலும், நமக்குள் இருக்கும் வக்கிரம், பழி வாங்கும் எண்ணம், இது நாட்டின் தன்மானம் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, இதெல்லாம் வேற்று உருவம் பெற்றிருக்கிறதே தவிர, இன்னும் ஒன்றும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்க வீரர்கள் video games - ல் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்ற காட்சி - விக்கி லீக்சில் பெரிய செய்தியானது. இங்கே ஒரு boundary அல்லது sixer அடித்தல், அது எதிரி வீரனின், தலையைக் கொய்து அதை bat - ஆல் அடிப்பதாக நினைத்துக் கொள்வதையும், உடனே பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பதையும், நாம் என்ன வென்று சொல்வது.
- போர் நடத்த முடியாத வருத்தத்தில் நாம் இதையே colosseum போலவும், அதில் இருக்கும் வீரர்களை Gladiators போலவும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்பு, தன் தேசத்தின் கவுரவமும், பெருமையும் தான் வீரர்களின் கண் முன்னே நிற்குமே தவிர, எந்த வித மன அழுத்தமுமின்றி விளையாட முடியுமா என்ன?
- நமது பழி வாங்கும் எண்ணம், violence இவைகளையெல்லாம் வெளிப் படுத்த மாற்று வழியாக இதைப் பார்க்கத் தொடங்கி விட்டோம். சிறுவர்களுக்கு video Games, நமக்கு கிரிக்கெட். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம்.
- நான் கிரிக்கெட் பார்க்க வில்லை என்று சொன்னால், நான் தேசத் துரோகியாகிவிடுவேன். விளையாட்டு முடிந்த பிறகு, highlights பார்த்தேன். முதலில் சேவாகும், தெண்டுல்கரும், களமிறங்கியபோது, அவர்களின் முன்சென்று அவர்களோடு நடந்து சென்ற கேமிராவின் பதிவும், ஸ்டேடியத்திலிருந்து வந்த இரைச்சலும், உடனே எனக்கு Gladiatorai த்தான் நினைவூட்டியது. [நான் விளையாட்டிற்கோ, கிரிக்கேட்டிற்கோ எதிரியில்லை, இதையெல்லாம் எழுதக் காரணம் முதல் ஐந்து பாராக்கள்.]
- போரின் அடுத்த நிலை -
- பணம் கொடுத்து அல்லது வீரர்களை விலைக்கு வாங்கி போட்டியின் முடிவை முன்பே நிர்ணயம் செய்வது என்பதெல்லாம் குற்றம்தான். பணம் கொடுப்பது மட்டும்தான் குற்றமா. இப்படி நாட்டுத் தலைவர்கள் மன அழுத்தம் கொடுப்பதுதான்.
- பாகிஸ்தானில் அரை நாள் அனைத்திற்கும் விடுமுறை. ரவி சாஸ்திரி, முதலில் சொல்லுகிறார், "No body would mind even if somebody does not turn to office today - it is such an important match." அறிவிக்கப்படாத விடுமுறை.
- அனைத்து அரசியல் தலைவர்கள், பிசினஸ் நண்பர்கள், சினிமா ஸ்டார்கள், இப்படி எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்களே அவர்களிடம் பணமில்லாத ரசிகனின் உண்மையான ரசனை இருக்குமா.?
- ஐந்தாவதாக - இது இன்னுமொரு முக்கியத் தொழில்
- கிரிக்கெட், இன்றைய நவீன உலகின் பணம் கொழிக்கும் விளையாட்டு. அதற்காகவே அவர்கள் சில போர்களை உருவாக்குகிறார்கள். ASHES Series - ஆஸ்திரேலியா இங்கிலாந்துப் போர். இந்தியா பாகிஸ்தான் போர். விளம்பரங்கள் வழியாக பணம் கொழிக்க, வீர்கள் வழியாக தங்களின் பொருட்களுக்கான விளம்பரம் செய்ய, இது தொழில். சாதாரண ரசிகன் எப்போதும் சாதாரண ரசிகன்தான்.
- சிம்பு தேவனின் இம்சை அரசனில் கிரிக்கெட் பாருங்கள்.
- "There are only two religions in India: Cricket and Cinema" ஒரு ரசிகை போர்டு ஒன்று பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை, "There is only one language - that is business."
- இதனால் சொல்லப்படும் ஜோக் - CRICKET FOR PEACE
- இதனால் பாதிக்கப் படுபவர்கள் வாக்காளர்கள்
- வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்ட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், மொஹாலி செல்வதைத் தவிர்த்து தமிழகம் வந்திருந்தால் கொஞ்சம் கோஷ்டி சண்டையாவது குறைத்திருக்கலாம்.
- இதனால் சொல்லப்படும் செய்தி
- இறுதிப் போட்டியை விட அரை இறுதிப் போட்டி மிகப் பெரிய போர் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் - தொலைகாட்சிகள், மொஹாலி கிரிக்கெட் வாரியம், ... இப்படி பெரிய business நபர்களெல்லாம் இப்படிக் கோடிக்கணக்கில் ஒரு போட்டியில் வருமானம் பெறும்போது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு - தனது வாக்கை வைத்து business செய்வதை, வாக்காளர்கள் பணம் பெறுவதை மட்டும் இந்தத் தேர்தல் கமிஷன் தடுக்கிறதே - இது நியாயமா?
- இன்றைய இறுதிப் போட்டியில், மன்னிக்கவும் இறுதிப் போரில் [தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையா அல்லது ..................... இந்தியாவா -] யார் வெற்றி பெறுவார்?
- இதை ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஆர்யாவிற்கு நல்லது.
3 comments:
நடிகர் ஆர்யா ஒரு இசுலாமியர்.
நல்லாத்தான் சொல்லியிருக்கீக..ஆனா இதையெல்லாம் யாரு இப்போ கேட்கிறாக...?
நன்றி நண்பரே. ஆர்யா இஸ்லாமியர் என்பது எனக்குத் தெரியாது.
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்