இந்த ஆண்டின் இறுதி பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் புதிய ஆண்டின் தொடக்கத்தில் நமது நம்பிக்கை யாரை, எதைச் சார்ந்தது இருக்க வேண்டும் என்பதற்கான தொடக்கமாகவும் இருக்கலாம்.
அறிவியலையா அல்லது கடவுளையா?
அறிவியல் மட்டும்தான் மக்களை மூட நம்பிக்கையிலிருந்து காப்பாற்றுகிறது என்று நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் நேற்று சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவில் பேசினார். இதில் சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொரு பெயரும் மிக முக்கியமானது. நோட் த பாய்ன்ட்.
அதில் மிக கவனிக்கப் பட வேண்டியது என்ன வென்றால் எந்த நட்சத்திரங்களும் நம் வாழ்வில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பற்றி எல்லாம் நமக்குக் கேள்வி இல்லை. அவர் என்ன சொல்கிறார் - அறிவியல் மட்டும்தான் ஆதரத்தோடு சொல்கிற போது அதை ஏற்றுக் கொள்கிறது.
அவரே கொடுத்திருக்கும் உதாரணம் - முன்னாடி வைட்டமின் சி சாப்பிட்டா சளி புடிக்காது கான்சர் வராதுன்னு புகழ் பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் அறிவித்தார். ஆனால் அது இப்போது ஆதார பூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள்தான் புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.
அட!நினைச்சா ஆதார பூர்வமா வைட்டமின் சி தேவைன்னு சொல்லுவீங்க அப்புறம் வேற ஆதாரம் வந்த உடனே அது இல்லை இதுன்னு சொல்லுவீங்க.. புது ஆதாரம் வந்தா இல்லை இது தப்புன்னு சொல்லுவிங்க..
அணு நல்ல கண்டு பிடிப்புன்னு சொல்லுவீங்க அப்புறம் கொஞ்ச நாள்ல ஆமா அதுல கதிர் வீச்சு நமக்கு நல்லதில்லைன்னு சொல்லுவீங்க...
செல் போன் நல்ல கண்டுபிடிப்புன்னு சொல்லுவிங்க அப்புறம் அத பயன் படுத்துரதுனால ஒன்னும் ஆகாதுன்னு ஆதாரப் போர்வமா சொல்லுவீங்க .. இன்னும் ஒருத்தர் உடம்புக்கு நல்லதில்லைன்னு ஆதாரப் பூர்வமா சொல்லுவார்...
இப்படி நீங்க சொல்றதப் பார்த்தா வளர்ச்சி மாதிரி தெரியலையே... உங்களை நம்பி நாங்க இன்னும் வைட்டமின் சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப என்னடான்னா - பெருமாளே நீதான் காப்பத்தனும்.
*********
பெருமாளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இந்த வருஷம் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் வருமானம் மட்டும் ஆயிரத்து எழுநூறு கோடியாம். இப்ப நான் என்ன பண்றது? திரு வெங்கட்ராமன் சொல்றதைக் கேக்குறதா அல்லது பெருமாளைக் கேக்குறதா?
ஏன்னா "இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் விண்வெளியில் செயற்கைக் கோளை ஏவுவதற்கு முன்பாக ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்".
செய்தியில கடைசிப் பாராவைப் படிங்க!
அப்ப, ஆன்றோர்களே சான்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நீங்களே சொல்லுங்கள் - ஹூ இஸ் தி ஹீரோ? ஹூ இஸ் தி ஹீரோ?
திரு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களே
நீங்கள் முதலில் செல்ல வேண்டியது ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு: சொல்லவேண்டியது திரு இராதாகிருஷ்ணனிடம்...
[இராமகிருஷ்ணனும் இராதா கிருஷ்ணனும் -
-ன்னு தலைப்பு வைத்திருக்கனும்
மிஸ்ட்]
கொசுறு:
தமிழக பக்தர்கள்! ஐயப்பன் கோவிலுக்கு போவதற்கு பதில் பழனிக்குப் போவதற்கு முல்லைப் பெரியாறு உதவுனமாதிரி திருப்பதிக்குப் போகும் பண பக்தர்கள் திருத்தனியோட முடிச்சுக்கிட்டா நல்லா இருக்கும்.
கொசுறு:
அறிவியலை ஏற்றுக்கொள்ளுவது தவறு என்றோ அல்லது பக்தியும் மூட நம்பிக்கையும் சரி என்பதையோ இந்தப் பதிவு வெளிப்படுத்தவில்லை. அறிவியலில் உறைந்திருக்கும் முரணை வெளிப்படுத்துவது - அவ்வளவே.
நன்றி: தினமணி செய்திகளுக்காக...
10 comments:
அனைத்து அறிவியல் விளக்கங்கள் முற்றுப் பெறவே இல்லை... யூக அடிப்படையில் அமைந்தது என்று இன்னும் டார்வின் கோட்ப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நாடு அமெரிக்கா... நல்ல விவாதங்களுக்கு வழி கோல்கிறது அறிவியல் என்ற அடிப்படையிலும்... விவாதங்களை விதண்டாவாதம் என்று திசை திருப்புகிறது ஆன்மிகம் என்று புரிந்து கொண்டால் புதிய வருடத்திலேயே விடியல் காணலாம்...
[சளி என்பது வைரஸ் கிருமியால் தோன்றுவது... வைரஸ் கிருமிகளுக்கு உயிரே இல்லை... பின்பு எப்படி அதை கொல்வது?]
தமிழக பக்தர்கள்! ஐயப்பன் கோவிலுக்கு போவதற்கு பதில் பழனிக்குப் போவதற்கு முல்லைப் பெரியாறு உதவுனமாதிரி திருப்பதிக்குப் போகும் பண பக்தர்கள் திருத்தனியோட முடிச்சுக்கிட்டா நல்லா இருக்கும்.//
அட ஹா ஹா ஹா ஹா இது நல்லா இருக்கே...!!!
இப்ப நான் என்ன பண்றது? திரு வெங்கட்ராமன் சொல்றதைக் கேக்குறதா அல்லது பெருமாளைக் கேக்குறதா?
நல்லா கேள்வி
தமிழக பக்தர்கள்! ஐயப்பன் கோவிலுக்கு போவதற்கு பதில் பழனிக்குப் போவதற்கு முல்லைப் பெரியாறு உதவுனமாதிரி திருப்பதிக்குப் போகும் பண பக்தர்கள் திருத்தனியோட முடிச்சுக்கிட்டா நல்லா இருக்கும்.//suppar
பதிலுக்கான பதிவா ?.
@suryajeeva
இதுவரைக்கும் வெளிவந்த கோட்பாடுகளில் டார்வினின் கோட்பாடு தான் மிகவும் சரியான புரிதலைத் தருவதாக அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். அது சரிதான். ஆனால் விளக்கம் கொடுக்க முடியாத விவரணைகள் அந்த கோட்பாட்டிற்கும் நிலவுவது என்பதும் உண்மை.
என் கருத்து என்னவென்றால் மனிதர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களின் இருப்பையும் அறிவியல் இன்னும் உன்னத நோக்கத்தோடு அணுக வேண்டியிருக்கிறது. இயற்கையின் வினைகளைக் கண்டுபிடித்து மனிதனின் வாழ்வை மேம்படுத்துவோம் என்று அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிவியலின் கண்மூடித்தனத்தை நான் கண்டிக்கிறேன். அவ்வளவே.
அறிவியலின் மனித இருப்பில், பண்பில், மதிப்பிடுகளில் அறிவியல் கண்டுகொள்ளாமல் இருந்து விதண்ட வாதம் செய்வதும் ஆன்மிக வாதிகளின் விதண்ட வாதத்திற்கு காரணமாக இருக்கலாம்.
விதண்ட வாதத்திற்கு மருந்தில்லைதான்... என்ன செய்வது?
அறிவியல் விஞ்ஞானிகள் ஏழுமலையானைத் தரிசிக்கக் கூடாதலாவா?
அப்புறம் அணு உலை ஆரம்பிக்கும் போது பூஜை போட்டு பாது காப்புத் தரவேண்டும் என்று அவர்கள் கடவுளை வேண்டுவார்களா? ஏதாவது ஆனதென்றால் அப்புறம் அறிவியல் சரியாத்தான் இருந்தது ... பூஜை ஒழுங்க நடக்கலைன்னு மாத்தி மாத்தி விதண்ட வாதம்தான் வரும்.
நம்ம நாட்டில் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறோம்.
ஒரு பக்கம் அறிவியல் தேவை என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். அவர்களே பிறகு சாமி கும்பிட்டுவிட்டுதான் செயற்கைக் கொலை ஏவுகிறார்கள் என்றால் அறிவியல் அறிஞர்களே இன்னும் தங்கள் மூடத் தனத்தை விட்டு வெளிவரவில்லை என்றுதானே அர்த்தம். அவர்களை விட்டு விட்டு சாதாரண மக்களைக் குறை கூறுவது சரியில்லைதானே!
@MANO நாஞ்சில் மனோ
நம்ம சொன்னா யாரு கேப்பா?
@sasikala
நீங்க என்ன சொல்றீங்கன்னு சொல்லாமே போயிருக்கின்களே..
@மாலதி
நன்றி சகோதரி ..
@நண்டு @நொரண்டு -ஈரோடு
பதிலுக்கான பதிவல்ல...
ஒரே நாளில் ஒரே செய்தித்தாளில் வந்த இரு வேறு செய்திகள்..
நாமதான் முடிவு செய்ய வேண்டியது. இந்த பட்டிமன்றத்தின் நீதிபதிகள் நீங்கள்தானே.
வக்கீல் நீதிபதியாகவும் இருக்க வேண்டுமல்லவா?
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்