14.12.11

ஒஸ்தி - ஒசத்தி


"லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஹொவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்...."

அரசியல் பாடம் - 
அம்மாவைத் தாண்டி தமிழகத்தில் எதுவுமே செய்யக் கூடாது செய்யவும் முடியாது என்கிற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக் கிறார் சிம்பு. ஒரு சண்டையில் எதிரி ஒருவனுக்கு தொலை பேசி வருகிறது - யாரென்று கேட்கிறார் சிம்பு - அவர் 'அம்மா' என்று சொல்ல உடனே சிம்பு - நேரடியாகவே அம்மாவைப் பார்ப்பது போன்று ஒரு பம்மு பம்மி
"அம்மாவைக் காக்க வைக்கக் கூடாது". அப்படியே "அம்மாவை நானும் கேட்டேன்னு" சொல்லுன்னு சொல்லுவாரு பாருங்க.
எதிரியா இருந்தாக் கூட அம்மா பேரைச் சொல்லிட்டா என்ன நடக்கணும் நடக்கும் என்பதை இதை விட வேறு யாரும் எடுத்துச் சொல்ல முடியாதுங்க. தமிழகத்தின் நடப்புச் சூழலை பம்முவது மாதிரி பம்மி அடித்திருக்கிற கிண்டல் ரொம்ப அருமைங்க...
[எதோ நம்மளால முடிஞ்சது - அவரு ஒரு அமைச்சரைப் பேசி மாத்தும் போது நம்ம கிளப்பி விடக் கூடாதா...]

குடியின் கொடூரம்
குடியின் கொடூரத்தை இந்தப் படத்தில் விவரிப்பது மாதிரி வேறு எந்தப் படத்திலயும் விவரிக்க முடியாது. 
படத்தின் கதாநாயகியின் அப்பா - எதுக்குக் குடிக்கிறாரு, ஏன் குடிக்கிறாரு, ஏன் அந்தப் பொண்ணு அவர் உயிரோட இருக்குற வரைக்கும் அவரை விட்டு வர மாட்டேங்குது - ஒருத்தரு குடிகாரனா இருந்தா எதைப் பத்தியும் கவலைப் பட மாட்டாங்க அது பெற்ற பொண்ணா இருந்தாக் கூட - 
அதுனால சிம்பு முதல்ல பொண்ணுகிட்ட போய் அவரை மாத்துன்னு சொல்றாரு அது முடியலன்ன உடனே அவருகிட்டே நேரா போய் நீயெல்லாம் ஒரு அப்பனா அப்படின்னு கேட்ட உடனேயே மகளுக்காக நான் குடிக்கிறதை விட்டேர்றேன்னு சொல்லி தண்ணீல விழுந்து செத்துப் போராறாரு. தண்ணீர்ல இருப்பவனுக்கு தண்ணீர்லதான் மரணம் என்பதை விழிப்புணர்வுச் செய்தியாகச் சொன்னதுக்கே - தண்ணியடிக்கலாம்.

காவல்துறையின் கொள்ளைகள் 
காக்கிச்சட்டை போட்டுக்கொண்டால் அவரை வெறும் போக்கிரியாகத்தான் காட்ட வேண்டுமா அல்லது கடமை உணர்வுள்ள போக்கிரியாகத்தான் காட்டவேண்டுமா என்கிற கேள்வியில், கடமை உணர்வுள்ள, அதேசமயம்  தேர்தல் ஆணையத்தின் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமலேயே அவர்கள் சொல்லாமலேயே மக்களுக்குக் கொடுக்கப் போகும் பணத்தை பிடுங்கி போலிஸ் சீப்பு வாங்குவதும், வீட்டுக்கு ஜெனரேடர் வாங்குவதும் என செலவு செய்கிறார் ஹீரோ. [மங்காத்தா அர்ஜூன் மாதிரி அவர் அப்படித்தான்னு கடைசி வரைக்கும் தெரியாது இங்கே தெரிஞ்சுருது அவ்வளவுதான்] ஆனால் இந்த நிலையில்தான் நமது காவல் துறை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி - கடந்த தேர்தலின் போது காவல் துறையினர் வழிப்பறி செய்த பணம் எல்லாம் ஸ்வாக செய்யப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு எல்லார் சார்பாக மனுப் போட்டிருப்பதர்காகவே இயக்குனருக்கும் அந்தப் பாத்திரத்தை ஏற்று வந்து போன சிம்புவுக்கும் பாராட்டுப் பத்திரமே தரலாம்.

 நடிகர்கள் ஒற்றுமை

ரசிகர் மன்றங்கள் என்று தமிழகம் பிரிந்து போயிருக்கிற நிலையை 
மாற்ற வேண்டுமென்று மணிக்கணக்காக யோசித்து 
மங்காத்தா நூறாவது நாளில் படத்தை வெளியிட்டு 
அஜித் ரசிகர்களின் பலத்தையும் -  
படம் முழுவதும் 
விஜய் வசனம் பேசும் அதே ராக தாளத்தோடு பேசி 
சிம்பு அப்படியே விஜயாக வந்து போயும், 
பாட்டில் கூட "வில்லு வில்லு வில்லு ... ன்னு குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவாங்களே அந்த பாட்டின் ராகமும் தெரியும்படி செய்து, 
தன்னை தலதளபதியாக மாற்றி ரசிகர் ஒற்றுமையை நிலை நாட்டிய அந்த நல்ல குணத்திற்காக 
சிம்பு ரசிகர் மன்றத்தை மட்டும் நாட்டில் வைத்து விட்டு 
மற்ற எல்லாத்தையும் கலைத்து விடலாம். 
அப்பா பாசம்
அம்மா பாசம் போல அப்பா பாசத்தையும்  தூக்கி நிறுத்தியதில் மட்டுமல்ல, அப்பா என்பவர் உரிமையோடு சண்டை போடுவதற்காக உள்ளவர் என்கிற உரிமையையும் நிலைநாட்டியதற்காகவும் 
அப்பாவிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாது [அப்பான்னு பேசக்கூடாது] என்கிற பாச உணர்வையும் கொடுத்ததனால் தன் அப்பா மேலுள்ள பாசத்தையும் வெளிக்கொண்டு வந்து தன் அப்பாவின் மனம் குளிரச் செய்ததனால்.. அவருக்காகவே இனி தமிழ் நாடை இனி தந்தை நாடு என்று அழைக்கலாம்.

இன்னும் நிறைய இருக்கு அதனால படம் பார்த்து நீங்களே தெரிஞ்சுக்கங்க:

கொசுறு - ஒன்று     பயோ டேட்டா

வைத்த பெயர் -                              ஒஸ்தி தி மாஸ் - மாஸ்டர் ஒப் ஆப்பு
வைக்க விரும்பிய பெயர் -     குஸ்தி - மாஸ்டர் ஒப் காப்பு [காவற்துறை]
ஹீரோ  -                    எஸ் டி ஆர். [STR] A மிஸ்ஸிங் ஏன்னா அவர் லிட்டில் [str]
ஜோக் அடிப்பவர் -                       சந்தானம்
எத்தனை பேர் நடித்தவர்கள்?  பாதிப்பேர் நடிக்கலை

பிடித்தது -                                          இசை
அதில் பிடிக்காதது -                     பல பாடல்களின் பின்னணி நினைவுகள்
கண்டுபிடிப்பு -                                இடுப்பில் கொலுசு

அடிக்கடி சொல்லும் வசனம் - கண்ணாடி
அடிக்கடி மாட்டுவது -                 கண்ணாடி
அதை மாட்டுவது -                       பின்னாடி


கொசுறு இரண்டு
சிலவிஷயங்களை அனுபவிக்கனும் ஆராயக் கூடாதுன்னு கமல் எதோ ஒரு படத்துல சொல்வாப்புல. இருந்தாலும் ஆராயணும் போல இருக்கே. இந்தப் படத்துல சிம்பு பேசுற நெல்லை பாஷை கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. இவங்க பேசுறத பாத்து காட்டுப் பாக்கம் திருநெல்வேலி பக்கத்துல இருக்குன்னு நினைக்க வேண்டியிருக்கு. எனக்குத் தெரிஞ்சு சென்னை போரூர் பக்கம்தான் அது இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
அதுக்கும் நெல்லை பாஷைக்கும் என்ன சம்பந்தம் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் - ன்னு அழகன் படத்துல மம்மூட்டி பேசுரமாதிரி எல்லாம் நான் கேக்கலை. அவ்வளவு அழகா [!] நெல்லை பாஷை பேசுற சிம்பு - பாம் வெடிச்ச பொறவு ரொம்ப நல்லா தமிழ் பேசுறாக. அது என்ன மாயமோ தெரியலை... நெல்லை பாஷை மாறனும்னா பாம் வெடிச்சா போதும் போலெல.

படத்துல அவர் அடிக்கடி - யாரையாவது அடிக்க அடிக்க சொல்ற வசனம் "ஏலே நான் கண்ணாடி மாதிரி, நீ சிரிச்சா நான் சிரிப்பேன், நீ ஆடுனா நான் ஆடுவேன் ..." படம் பாத்து அழுதுகிட்டும், கடுப்புலயும் இருக்கேன் - ஆனா அவர் மட்டும் சிரிச்சிக்கிட்டே இருக்காரு. என்ன கண்ணாடியோ.. ஒருவேளை ரசம் போன கண்ணாடியோ?


கடைசியா சந்தேகக் கேள்வி
பணம் கொஞ்சம் எடுக்கிறாரு - அதுக்கு என்ன கணக்கு -  போலிசு பணம் எடுத்து வீட்டுக்கு ஜெனரேட்டர் வாங்குறது ஓகே. அதுல போலிசு ஜிப்புமா வாங்குவாங்க?

ஜாலியா எடுத்துக்குங்க 

நீங்க கேக்கக் கூடாத கேள்வி -
அப்புறம் இந்தப் படத்தை ஏண்டா பாத்த?

15 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

அப்புறம் இந்தப் படத்தை ஏண்டா பாத்த?//

ஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியலை...

கார்த்தி கேயனி சொன்னது…[பதிலளி]

படம் மொக்கைதான்
நான் பீல் பண்ணிட்டேன்

கோகுல் சொன்னது…[பதிலளி]

மொத்தத்தில் ஒஸ்தி ரசம் போன கண்ணாடியா?

சேக்காளி சொன்னது…[பதிலளி]

// மகளுக்காக நான் குடிக்கிறதை விட்டேர்றேன்னு சொல்லி//
படத்துல வசனம் "மகளுக்காக விட்டுர்றேன்" னுதான் வரும்.அப்புறம் உயிரை விட்டுருவார்.//குடிக்கிறதை// ங்கற வார்த்தை இருக்காது.திரும்ப ஒரு தடவ தேட்டருக்கு போயி படத்த பாரும்வே.

அப்பு சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

வணக்கம்...

அப்பு சொன்னது…[பதிலளி]

@கார்த்தி கேயனி

நன்றி
மொக்கை படமென்றாலும் ஓடும் என்று நினைக்கிறேன்....

அப்பு சொன்னது…[பதிலளி]

@கோகுல்
ரசம் போனதோ பூசுனதோ...இன்னும் நல்லாப் பூசியிருக்கலாம்..

அப்பு சொன்னது…[பதிலளி]

@சேக்காளி
//////// மகளுக்காக நான் குடிக்கிறதை விட்டேர்றேன்னு சொல்லி//
படத்துல வசனம் "மகளுக்காக விட்டுர்றேன்" னுதான் வரும்.அப்புறம் உயிரை விட்டுருவார்.//குடிக்கிறதை// ங்கற வார்த்தை இருக்காது.திரும்ப ஒரு தடவ தேட்டருக்கு போயி படத்த பாரும்வே/////////

வரவுக்கும், தவறைச் சுட்டிக் காட்டியமைக்கும் ரொம்ப நன்றி,

இந்த அளவு விஷயம் இருக்கும்னு எனக்குத் தெரியலை.
விட்டுர்றேன் - ன்னு சொன்னவுடனே நானாத் தான் நினைச்சுட்டேனா?

சரி என்னமோங்க - குடிகார அப்பாவுக்கு குடியை விடுறதவிட உயிரை விடுறது சுலபம்னு எடுத்துச் சொல்லியிருக்காகல்ல.
அதுவும் சரிதானே.
அப்புறம் இன்னொரு தடவை பாத்தா இன்னொரு பதிவைப் போடுறதுக்கா. உங்களை நம்புறேன் சாமி.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

MOONJI SOMBU THANEY VACHUKONDA PERU STR PINJULEYE PAZHUTHA VAMBU INTHA SIMBU

அப்பு சொன்னது…[பதிலளி]

@பெயரில்லா


வருகைக்கு நன்றி நண்பரே,
உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

இந்தப் பதிவு சிம்புவுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் ஆதரவாகவோ எழுதப்பட்டதல்ல. சிம்பு மிகத் திறமையான நடிகர்தான். இன்னும் தேவைக்கேற்றார்போல சிறப்பாக நடிக்கலாம் என்பதனால் பகடியாக எழுதப்பட்டதே. நீங்கள் சொல்லுவது போல அவர் ரொம்ப தன்னையே அதிகமா நினைத்துக் கொள்ளுதல் கூட தவறுதான். இன்ஸ் - க்கு உள்ள உடல் வாகு இல்லாவிட்டாலும் பரவாயில்லை - அதற்கேற்ற நடிப்பாவது இருந்திருக்கலாம் என்பதில்தான் என் வருத்தம்.

இதில் தனி மனிதத் தாக்குதல்களை தவிர்க்க வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன். இரு நடிகன் என்கிற முறையில் ஒருவரை விமர்சிக்கலாம்

- ஒருவரின் உடற்கூறுகளை ஒப்பிடுவதோ அல்லது தவறாகப் பேசுவதிலோ எனக்கு உடன்பாடு இல்லை.

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

நான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை...

தங்களின் பதிவு மூலம் கதையில் நிறைய சொதப்பல் நிகழ்ந்திருக்கிறது என்று புரிகிறது....

PUTHIYATHENRAL சொன்னது…[பதிலளி]

* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!

* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!

* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை

* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!

பிரேம் குமார் .சி சொன்னது…[பதிலளி]

//கொசுறு - ஒன்று பயோ டேட்டா//மிகவும் ரசித்தேன் இதில் குறிப்பிட்டவற்றை ..

அப்பு சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS

வணக்கம் ராஜா,
வருகைக்கு நன்றி.
இந்நேரம் படம் பார்த்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@பிரேம் குமார் .சி

நன்றி பிரேம்குமார்..

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்