வலைப் பதிவொன்றின் வழியாக ஆங்கில பதிவொன்று வாசித்தேன்.
ராதிகா கிரி - அதில் எப்படி தமிழகத்தில் மற்றும் மற்ற இடங்களில் பனிபுரியும் மலையாள பத்திரிக்கை ஆசிரியர்கள் கேரள சார்பான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள் என்று விவரித்திருந்தார்கள்.
சின்ன விஷயம்தான் ஆனால் அது சொல்லும் படிப்பினைகள் ஏராளம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 'பறந்து' பரந்து விரிந்து இருக்கும் கேரளா நண்பர்கள், எப்படி எப்போதும் உண்மையைத் தாண்டி தங்கள் கேரளா விரும்பிகளாக இருகிறார்கள் என்பது பலருக்கு புரியாது.
சொன்னால், நம்மை பழமை விரும்பிகள் என்று சொல்வதற்கு நிறைய பேர் தயாராக இருப்பார்கள். பல ஆண்டுகளாக தமிழ் நாட்டில் வாசம் செய்யும் எனக்குத் தெரிந்த கேரளா மாநிலத்தின் குடிமகன் ஒருவர் கேரளா சென்று புதிய கார் வாங்கி வந்தார். ஏன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கேரள பதிவென்னோடுதான் இங்கே இன்னமும் அந்தக்கார் ஓடிக் கொண்டிருக்கிறது.
எங்கே இருந்தாலும் எப்படி தாங்கள் விரும்புவதை நிலை நிறுத்துவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.. முல்லைப் பெரியாறு அணை பற்றி அறிய விக்கிப் பீடியாவில் தேடிய போது அதிலும் [mullaperiyar] என்றுதான் தேட வேண்டியிருக்கிறது. அதாவது பரவாயில்லை. அதில் எழுதியிருந்த விசயம் - இரண்டு மாநிலங்களுக்கு இடையிலும் உள்ள தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு உள்ள 'ரப்பிஷ்' ஒப்பந்தம் என்று ஆரம்பித்து இருந்தது.
... நான் விக்கி பெடியாவில் லாக் இன் செய்து, அந்தப் பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இன்னும் விக்கி பீடியாவில் எடிட் செய்ய படிக்க வேண்டியிருக்கிறது. வேறு யாரோ நிச்சையம் முறையீடு செய்து அதை மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வார்த்தை இப்போது மாற்றப் பட்டிருக்கிறது. ரபிஷை எழுதியது நமது கேரளா நண்பர்கள்தான்.
தமிழன்பர்கள் நிறைய இது போன்ற பொது தளங்களில் எழுத வேண்டிருக்கிறது.
ஆனால், நமக்குத் தெரியாமலேயே அல்லது விஷயம் புரியாமலேயே இன்னும் கேரளா கேட்பதில் தவறென்ன என்று கேட்கிற தமிழக வாழ் கேரளா நண்பர்கள் சில விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு - கொலை வெறி பாடலை ... மாற்றி டேம் பர்ஸ்ட் கேரளா புல்லா வாட்டரு - அப்படின்னு மாத்தி அதுல அம்மாவை ரத்த வெறி பிடித்த பேயாக படம் வெளியிட்டு ... இதல்லாம் தேவையா.. விக்கி பெடியாவில் ரப்பிஷ் என்பது... சாமி கும்பிட வருபவர்களை ... அதாவது அவர்களுக்கு வருமானத்தைக் கொண்டு வருபவர்களை உதைப்பது, வண்டிகளை நொறுக்குவது ,,,,,
ஆனால் இங்கே இருப்பவர்கள் மட்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கும், அதை அங்கே ஊருக்கு எடுத்துச் செல்வதற்கும் பாதுகாப்பு வேண்டுமாம்... அணை உடைந்தால் கேரளா புல்லா தண்ணீர் என்ன புழுகுடா சாமி. அணை உடைந்தால் இடுக்கிக்குதான் வரணும் தண்ணீர்.
கொஞ்சம் கூட இருக்கிற இடத்தின், சம்பாதிக்கிற இடத்திற்கான கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இப்படி வெறி பிடித்து உண்மை புரியாமல் இருப்பவர்களை நாம் என்ன சொல்லுவது...
திரு வை.கோ. சொன்னது போல - நீ இந்த ஒப்பந்தத்தை மதிக்கலன்னா நானும் மாநிலப் பிரிப்பை ஒத்துக் கொள்ளலை - இடுக்கி தமிழகத்திற்கு சொந்தம்...
வேறென்ன சொல்றது...
8 comments:
சும்மா மூஞ்சில அடிக்கிறமாதிரி சொல்லி இருக்கீங்க.. எல்லா ஆங்கில ஊடகங்களிலும் ஏதோ தமிழ்நாடுதான் பிடிவாதமாக இருப்பதாக செய்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் உண்மை நிலையை நேரடியாக சொல்ல இஷ்டம் இல்லை..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
இப்பவே அங்கே தக்காளி முன்னூறு ரூபாய் ஆகிவிட்டது இன்னும் கொஞ்சம் பொறுங்க தானா இறங்கி வந்துருவாங்க...!!!
@Sankar Gurusamy
எல்லாவற்றிலும் அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
அல்லது
அதை செய்ய வைக்கிறார்கள்.
சிலர் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று முயல்கிறார்கள்.
@MANO நாஞ்சில் மனோ
ம் ஹூம் .. அவங்களுக்கு கர்நாடகா மற்றும் ஆந்த்ராவிலேர்ந்து வருமாம்...
Some how Keralites are managing to be in top Positions of almost all Government & Private organizations. Being top people, it is very easy to bend the rules towards their favour.
தோழர், விடுங்க இது சப்ப மேட்டரு... பிரவளம் இடைத் தேர்தல் முடியட்டும்... தானா அடங்கிடும்
@suryajeeva
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சப்பை மாட்டருதான் ஆனால் செய்யுற கூத்தைப் பார்த்து சும்மா விட முடியலை..
@பெயரில்லா
yes sir.
agreed.
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்