29.12.11

ஜெயா கேட்டவை -- "சோவா அ மோடியா "


முன்பு நான் விரும்பிக் கேட்பது “நீங்கள் கேட்டவை.”
விரும்பிய பாடல்களை எழுதிப் போடுவதற்கு [பதினைந்து காசுக்கு] அப்பாவை நம்பி இருக்க வேண்டுமே என்பதனால், நமக்கு விரும்பிய பாடல்களை வேறு யாராவது கேட்டிருக்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ரேடியோ கேட்போம். அப்படித்தான் விரும்பிய பாடல்களைக் கேட்க முடிந்தது. இப்போதெல்லாம் நமக்கு விரும்பிய பாடலை பார்க்கவே முடிகிறபோது அதற்கான நேரம் இல்லாமல் இருப்பதும் சோகம்தான்.
சரி எதற்கு இந்த நீங்கள் கேட்டவை புராணம்?

தமிழக முதல்வர் கடந்த வாரம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார். நிச்சயம் அதற்கு முன்பு பல முறை யோசித்திருப்பார். பல விஷயங்களை யோசித்திருப்பார். அப்படி அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் என்ன பாடல் கேட்டார் என்பது இப்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் வழியாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
அதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியே. 
அதற்கு முன்பு அவர் கேட்ட பாடல்.
மயக்கமா தயக்கமா....

முதலில் இதைப் பாருங்கள் பிறகு பேசுவோம்



யார் நம்பத் தகுந்த வட்டாரம் என்று கேட்பவர்களுக்கு...
வேறு யார் – நரேந்திர மோடி அவர்கள்தான் சொன்னார்கள்.
எனக்கும் அவருக்கும் ஒரு ஹாட் லிங்க் இருக்கு யு சீ....

என்ன கதை என்று கடுப்பாய் இருப்பவர்கள் தினமலரின் செய்தியைப் படியுங்கள். உங்களுக்கேத் தெரியும். 
அதாவது திருமதி சசிகலா முதலமைச்சரின் அளவுக்கு எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது என்றும் [நம்பினால் நம்புங்கள்...] அவரிடம் இந்தச் செய்தியை எப்படியும் சொல்ல முடியாததனால் மோடி வழியாக செய்தி அனுப்பப் பட்டே நமது முதலமைச்சர் அறிவுக் கண் திறக்கப்பட்டது என்று தினமலர் சொன்னது.

இப்ப வந்து மோடி கை அதிகமாகி அவர்தான் எல்லாமேஆகி விட்டதென்றால் யாருகிட்ட போவது... தினமலர்கிட்டயா?
சரி இப்படி தினமலர் எழுதுறது சோ வுக்குத் தெரியுமா... சோ கோவிச்சிக்க மாட்டாரா..?

சில நாட்களில் தினமலர் இதை எப்படி யோசித்ததுன்னே தெரியலை உடனே சோவைப் பேட்டி  கண்டு அவர்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது போல சித்தரித்து ஒரு பேட்டி வேறு வெளியிட்டிருக்கிறது...
அட ...... எப்படியெலாம் யோசிக்கிராங்கையா...

ஆக மொத்தம் ஜெயாவுக்கு யோசிக்கவே தெரியாதுங்குற ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா... அல்லது சோவும் மோடியும் சொன்னால்தான் சில முடிவுகள் எடுக்க முடியும் அதுதான் தமிழர்களை பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்று நா கூசாமல் எழுத முடிகிறது...

யாரைக் கேவலப் படுத்துகிறீர்கள் - 
தமிழரையா தமிழக முதல்வரையா?

ஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..
என்னமோ போங்க

சில கேள்விகள் அம்மாவிடம் ...

மயக்கம் இல்லாததால் இந்த முடிவா அல்லது கொடநாடு போகாமல் இருந்ததால்தான் இந்த முடிவா...
உண்மையிலேயே மயக்கம் தெளிந்ததா?
இன்னும் எத்தனை நாளைக்கு..


இப்படி நீங்கள் முன்பு சசி சொல்லுவதையும் இப்போது சோ சொல்லுவதையும் மோடி சொல்லுவதையும் கேட்டு நடந்தால் அவர்களின் பிடியிலிருந்து உங்களை மீட்பது எப்படின்னு நீங்களே சொல்லிட்டா நல்ல இருக்கும்...  

நாங்க மண்டையப் பிச்சுக்க வேண்டாம் பாருங்க... 

 

7 comments:

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

நாடகம் நடக்கிறது.. வேடிக்கை பார்ப்போம்.. அவ்வளவுதான்.. எப்பிடியும் திரும்ப சேர்ந்துக்கப் போராங்க..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

ஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..
என்னமோ போங்க//

தினமலர் செத்து காலம் பல ஆச்சு மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

எப்பிடியெல்லாம் பில்டப்பு கொடுக்குது பாருங்க தினமலம்...!!!

Unknown சொன்னது…[பதிலளி]

@Sankar Gurusamy

நீங்க சொல்றது சரிதான்.
மீண்டும் வரலாம்... ஆனால் வாய்ப்புகள் கம்மி என்றுதான் தோன்றுகிறது.
அம்மாவுக்கே வெளிச்சம்..

Unknown சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி ஐயா...

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

செத்துட்டதாத் தான் நினைக்கிறோம். ஆனால் அது சில பதிவர்கள் வட்டத்தில் மட்டும்தான் என்று எண்ணுகிறேன். உண்மையின் உரைகல் பல சமயங்களில் சீண்டி விடுவதையும் அதைத் தூக்கி நிறுத்துகிரவர்களும் நம் நாட்டில் ரொம்ப அதிகம்..
இப்போதைக்கு அது சாகாது...
தொடர்ந்தது நாமும் சீண்டிக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றே படுகிறது..
நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

சொந்தககை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுரது...ஹிஹி இதான்யா நிலைமை!

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்