இன்று இந்திய தேசிய காங்கிரசுக்கு எத்தியானையாவதோ பிறந்த நாளாம். வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமாப் படங்களில் [அந்த அளவுக்கு உலகப் படங்களை பற்றிய அறிவு கம்மி என்பதனால் தமிழ் சினிமா போதும்] எப்போதும் ஒரு ஹீரோ வில்லனாக மாறுவது போல படம் முடியுமா என்று தெரியவில்லை.
நல்ல ஹீரோ கடைசி வரை நல்லவராகவே இருப்பார். இன்னும் சில படங்களில் ஜாலியா இருக்கிற ஹீரோ திடீரென பொறுப்பு வந்து நல்ல பிள்ளையா இருப்பார். அல்லது இடையில கொஞ்சம் போதையில ஏதாவது தகராறு பண்ணுவாரு அப்புறம் திருந்திருவாறு... அல்லது கொஞ்சம் சஸ்பெண்சுக்காக யாரவது கெஸ்ட் ரோல் பண்ணி - கெட்டவனா வர்ற ஹீரோவை கொன்னுடுவாங்க...
ஹீரோ வில்லன்களா உயிரோடு விடப்படுகிற படம்னு சொன்னா மங்காத்தாவை சொல்லலாம்...
[ஜோதிகா வில்லியாக வந்த படத்தில் கூட
அவரை உயிரோடு விட்டுவைக்க வில்லை கூட்டம்]
சரி / எதற்காக இந்தப் புராணம்?
என்னைப் போல இப்படி யாராவது ஹீரோக்கள் வில்லன்களாக திரைப் படங்களில் உயிரோடு விடப் படுவதில்லை என்று வருத்தப் படுவார்கள் இருந்தால் உங்களுக்கு நல்ல செய்தி.
நிஜத்தில் ஒரு ஹீரோ வில்லனா மாறி, இன்றும் உயிரோடு உலவிக் கொண்டு பலரது உயிரைக் காவு வாங்கிக் கொண்டு திமிரோடு உலா வந்து கொண்டிருக்கிறார்.
இந்திய விடுதலைக்காய் உருவான ஒரு ஹீரோ, சுதந்திரத்திற்குப் பிறகு, ஹீரோ வேடத்தைக் கலைத்து விடாமல், சத்தம் போடாமல் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றவர்களை விட தமிழ் மக்களையே அவர் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஈழத்தில், ... பிறகு ........
அந்த ஹீரோவுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்கள்.
அவர் பெயர் - காங்கிரஸ்.
11 comments:
அந்த ஹீரோவுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்கள்.
அவர் பெயர் - காங்கிரஸ்.//
யோவ் என்னய்யா இப்பிடி கடுப்பேத்துறீங்க...!!!???
தக்காளி இவனையும் சீக்கிரம் போட்டு தள்ளிரலாம் கவலைப்படாத சகோதர
என்ன பண்றது,
தமிழ் நாட்டுல இன்னமும் காங்கிரசை நம்பிக் கொண்டிருப்போருக்காக
இந்தக் கடுப்பேத்தல்..
நீங்க கடுப்பாகாதிங்க...
@பெயரில்லா
அய்யா நல்லா இருப்பிங்க,
போட்டுத் தள்ளவெல்லாம் வேண்டாம்..
உண்மையைப் புரிஞ்சுக்கிட்டாப் போதும்..
நண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.
காங்கிரஸ் வரும் காலங்களில் மிகப்பெரிய காமெடி பீஸாக மாறிவிடும் போல் இருக்கிறது...
really superb.real comment with thrilling effect
கடைசி வரை செம த்ரில்லிங்! நன்றி!
@கவிதை வீதி... // சௌந்தர் //
எப்பவோ அது காமெடி பீஸ்தான் ... நாமதான் இன்னும் புரிஞ்சுக்கலை.
@பெயரில்லா
thanks sir, for coming,,,,
@திண்டுக்கல் தனபாலன்
ரொம்ப நன்றி தனபாலன்
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்