8.12.11

முல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா!



  • அச்சம் என்பதுதான் இரண்டு பிரச்சனைகளிலும் உள்ள முக்கியமான விஷயம் என்று நம்பப் படுகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம் - கூடங்குளம் பாதுகாப்பற்றது என்பதும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்பதும்.

கூடன்குளம் விஷயத்தில் மட்டும் 'கூடன்குளம்' பாதுகாப்பானது என்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மாற்றி மற்றொருவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முறை சொன்னது போல அதன் உண்மை நிலவரம் ஊருக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்த அச்சம் என்பது - வாழ்கிற மனிதர்களுக்கும், பிற்கால சந்ததியினருக்கும், இயற்கைக்கும், காற்றின் வழி பரவும் கதிர் வீச்சுக்கும் பாதிக்கப் படப் போவது கேரளாவும்தான். 
இதில் மட்டும் மத்திய அரசு சொல்வதைக் கேளுங்கள், நிபுணர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்கிற நம்ம மக்கள் கூட, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் மக்களும் மத்திய அரசும், நீதி மன்றமும் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள். அல்லது மிகவும் அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பார்த்து உங்களுக்கு இருக்கும் அச்சம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா - என்று இதற்கும் இங்குள்ளவர்கள் மேல் பழி போடுகிறார்கள்.

  • முல்லைப் பெரியாறு அணை என்பது - சிறியவர் முதல் பெரியவர் வரை அது உடைந்து விடும் உடைந்து விடும் என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள அரசியல் [தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி] தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகளுக்கு போடப் பட்ட ஒப்பந்தத்தையும் உடைப்பதற்கும், எந்த வித இழப்பிட்டுத் தொகையும் தராமல் தப்பிப்பதற்கும், இடுக்குக்கிக்கு தண்ணீர் வரத்தை அதிகரிக்கச் செய்வதற்குமான பல்வேறு நோக்கத்தோடு, அணை உடைந்தது போகும் என்கிற பிதியைக் கிளப்புகிற முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புல அரசியல் தெரிந்தால் நாம் முல்லைப் பெரியாறு அரசியல் அச்சம் நமக்குப் புரியும். 
  • முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் போடப் பட்டது அல்லது செல்லாது என்று நாம் வாதிடவும் முடியாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் அதே ஒப்பந்தம் சில மாறுதல்களோடு மீண்டும் தமிழக மற்றும் கேரள அரசுகளால் புதுப்பிக்கப் பட்டன. அங்கே மீன் பிடிப்பதற்கான உரிமை, கூடுதல் ஒப்பந்தத் தொகை.... எனவே இது இந்திய பேராயத்தின் சட்ட நுணுக்கங்களுக்குள் ஒத்து வரும் ஒரு ஒப்பந்தமே. இப்போது மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்கான காரணம் ஏற்கனவே மேலே கூறப் பட்ட காரணங்களே. அச்சத்தினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று அச்சுதானந்தர்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி - கேரள ஒட்டுமொத்தமாக அரசியல், மத வேறு பாடு இன்றி - எந்த இடங்களில் வாழ்கிறார்கள் என்கிற நினைவின்றி எல்லாரும் முல்லை பெரியாறு - முல்லப்பெரியார் - அணை பாதுகாப்பற்றது என்று குரல் கொடுக்கிறார்கள்.

  • தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லவில்லையே அப்புறம் என் இன்னும் எதிர்க்க வேண்டும் என்கிற நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கேரள அரசு நீதிமன்றத்தில், ஒப்பந்தம் என்பது அணை கட்டுவதற்கும், அதை நிர்வாகிப்பதற்கும் மற்றும் நிலத்திற்குமான ஒப்பந்தம்தான் எனவே இது தண்ணீருக்கான ஒப்பந்தம் இல்லை எனவே தண்ணீரைத் திருப்பி வேறு வழியாக அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை - என்று வாதிட்டது. இன்னமும் 'நாங்கள் தண்ணீர் தருவோம்' என்பதை எப்படி ஐயா நம்புவது ...

விஷயத்திற்கு வருவோம் - கூடங்குளத்தில் அச்சம் என்றவுடன் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசின் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அரசு என் முல்லைப் பெரியாறு விஷயத்தில் அமைதி காக்கிறது. 
எத்தனை ஆண்டுகளாக நீதி மன்ற முடிவைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழ் மக்களின் அச்சம் தவறு ஆனால் கேரள மக்களின் பொய்யான அச்சம் சரியா? 
இத்தனைக்கும் அணை உடைந்தாலும் அதிலிருந்து வரும் தண்ணீர் இடுக்கி அணை தாங்கக் கூடிய வலு இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. 
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறில் கட்டிய இடுக்கி அணையும் வலுவிழந்து விட்டதா? ஏனெனில் கேரள அரசு மக்களின் பீதியைக் கிளப்புகிரமாதிரி வெளியிட்ட ஒரு கானொளியில் முல்லைப் பெரியாறு அணை முப்பது ஆண்டுகளுக்காக மட்டுமே கட்டப் பட்டது என்கிற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்கிறார்கள். அப்புறம் எதுக்கு 999 ஒப்பந்தம்.? 
சரி சரி - இடுக்கி அணை எப்போது வலுவிழக்கும்? உங்க பொய்யை மெய்ண்டைன் பண்ண வேண்டாமா - சொல்லுங்க.

சரி விடுங்க - இதே கேரள அரசு அச்சத்தினால் தானே கூடங்குலப் ப்ராஜக்டை வேண்டாம் என்றது. உடனே அரசு கேட்டது. இப்போ இதுவும் வேண்டாம் என்கிறார்கள். மத்திய அரசு உடனே தீர்ப்பு வழங்கா விட்டாலும் நிச்சயம் அமைதி காக்கும். தமிழ் மக்கள் அச்சம் என்றால் அது சரியல்ல என்றால் என்ன சொல்லுவது?

இதே கேள்வியை தமிழ் நண்பர்களே, அல்லது தமிழக வாழ் கேரள நண்பர்களே - பலரிடம் "என்னமோ கூடங்குளம் அச்சம் அச்சம் என்கிறீர்கள்" இதே அச்சம் கேரள மக்களுக்கு இருக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள்?

இந்தக் கேள்வியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும்... அது ஏன் ஒரு அரசுக்கு வெண்ணையும் மற்றொரு அரசுக்கு சுண்ணாம்பும் தொடர்ந்து கொடுக்கிறது என்று...!


ஒரு ஊழியனின் குரல் - முரண்பாடுகள்

10 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

ம் ...

வவ்வால் சொன்னது…[பதிலளி]

நண்பரே,

முல்லைப்பெரியார் பற்றியும் பதிவு போட வேண்டும் என இருந்தேன், ஆனால் சோம்பல் காரணமாக போடவில்லை, இன்னும் கம்மோடிடி, வால்மார்ட் பதிவுகளையே முடிக்க முடியவில்லை :-))

எப்படித்தான் எல்லாரும் இப்படி பதிவுகளா போட்டு தாக்குறாங்களோ?

முல்லைப்பெரியாரிலும் சில ரகசியங்கள் இருக்கு , ஆனால் அதை யாரும் பேசவில்லை, அதை இடிக்க சொல்வது ஒரு அரசியலே.

கூடன்குளம் பற்றி இரண்டுப்பதிவு போட்டு இருக்கேன் பார்த்திங்களா?

கூடன்குளம் ஒரு மாற்றுப்பார்வை


அணு உலைப்பாதுகாப்பானதா

மாற்று எரிசக்தி சூரிய சக்தி

சூரிய மின்சக்தி உற்பத்தி

பெட்ரோல் விலை பற்றியும், சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் பற்றியும் ஒரு பதிவிட்டுள்ளேன் பார்க்கவும், ஓரளவுக்கு தான் தெளிவா இருக்கும், படிச்சுப்பாருங்க.

பெட்ரோல் பற்றி விலைக்காண காரணம் தெரிந்துக்கொள்ள பார்க்கவும்
சுட்டி:

பெட்ரோல் விலை ரகசியம்

உங்க கருத்துகளையும் சொல்லுங்க!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

எஸ் சரியாக சொன்னீர்கள் மக்களின் அச்சத்தை போக்க என்ன வழி என கண்டுபிடித்து களையவேண்டும், அல்லாமலும் கேரளா சொந்தமாக மின்சாரம் தயாரிக்கவே புதிய அணையை கட்டப்போகிறது என்பதே உண்மை...!!!!

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

எல்லா பிரச்சனைக்கும் பல கேள்விகள் நம்மிடம்... அரசிடமிருந்து பதில் மட்டும் என்வோ ?????

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

நல்ல அலசல்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Unknown சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு

தாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.

உங்கள் - ம் ல் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

Unknown சொன்னது…[பதிலளி]

@வவ்வால்
தாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.

நண்பரே, உங்கள் இணைப்புகளை எல்லாம் முன்பே படித்து விட்டேன். இருந்தாலும் இன்னொரு முறை பார்க்கலாமென்று இன்று மேய்ந்தேன். கூடங்குளம் விவகாரத்திலும், உங்கள் சூரிய ஒளி வழி மின்சாரம் பெறுவது குறித்தும் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் வலைப் பூவில் மாற்றம் இருக்கிறது - நன்றாக இருக்கிறது.

மற்றபடி பதிவெழுதுவது ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக இல்லை. உங்களை மாதிரி விரிவாக எழுதுவதற்கு நிறைய நாட்கள் மெனக்கெட வேண்டும். இந்தப் பதிவு கூட - ஒரு பதில் பதிவாக படித்த உடனே தோன்றியது எனவே எழுதினேன்.

இடிக்கச் சொல்லுவதன் அரசியல் எனக்குத் தெரிந்த வரை - எனது பதிவுகளில் கூட கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். உங்களது பார்வையில் உள்ள அரசியலையும் சொல்லுங்கள். பார்வைகள் விசாலமாகும்.
சூர்யாவின் கேள்விகளுக்கு பதிலாக உள்ள இரண்டு பதிவையும் பார்த்தேன். கொஞ்சம் அறிந்து கொண்டேன். ஆழ்ந்து அலச - நினைப்பதைக் கணினியில் ஏற்றுவது கடினமாகவே உள்ளது.

தொடர்ந்து பகிர்வோம்.
வரவுக்கு நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

தாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.

நண்பரே, மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கார்டூன் மிக அருமை. வரைந்தவருக்கு எனது பாராட்டுகள்.

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS

தாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.

யாரிடம் இருந்து வேண்டுமானாலும் பதில் எதிர் பார்க்கலாம். அரசிடமிருந்தும்தான் - ஆனால் நியாயமான பதிலை எதிர்பார்ப்பதுதான் கடினமாக இருக்கிறது..

Unknown சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்

தாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.

நன்றி - இன்றைக்கு படித்து விடுகிறேன்.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்