கொசுறு ஒன்று
கடந்த பதிவு சில கேள்விகளைத் தருவித்திருக்கிறது. அந்தப் பதிவு பொருளாதார விளக்கங்களை கொண்டிருக்கவில்லை, சிறு வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்வது சரியா? சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டினால்தான் ஐரோப்பிய அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி உருகிறதா என்ற கேள்விகள். அதற்கு பின்னூட்டத்தில் எழுதிய பதிலை இப்போது பதிவாக வெளியிடுகிறேன். பின்னூட்டத்தில் படித்தவர்கள் வேறு வலைப் பூவிற்குச் சென்று விடலாம்.
கருத்து
- கடந்த பதிவின் நோக்கம் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் மட்டும் இல்லை. தலைப்பு அதைப் பற்றியது மட்டும் என்று கூறுவது போல உள்ளது தவறே. மாறாக ஒட்டு மொத்த முதலளித்துவ அமைப்பின் தற்போதைய வடிவம்.
- மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் தனது கருத்தமைவைக் கட்டமைத்த காலத்தில் அவைகள் மிகப் பெரிய விடுதலை கூறுகளை உள்ளடக்கிய சக்தியாக இருந்தது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் என்பது முற்றிலும் மோசமானது என்று நான் நினைப்பதில்லை. அரிச்டோக்ராட்ஸ் என்ற மேட்டிமைக் குடியினர் மட்டும் மதிக்கப் பட்ட காலத்தில், சமுதாயத்தில் அனைவரும் சமத்துவம் மிக்கவர்களாக மதிக்கப் பட இது மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என்று மறுப்பதற்கில்லை. ஆனால் நாளாவட்டத்தில் இதுவே மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதனால் கம்யூனிசம் சரி என்றோ அதுதான் மாற்று என்பதோ என் கருத்து அல்ல. பல மாற்றுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதே சொல்கிற செய்தி.
- ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் உருவான நவீனம் அல்லது வளர்ச்சி என்பது அப்படியே இன்னோர் இடத்தில் சொருக வேண்டும் - சொருக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் அது மிக நன்றாகத் தெரிந்தாலும் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே தனது சுய ரூபத்தைக் காட்டும்.
- நவீனம் அல்லது சமூக வாழ்வு மேம்பாடு என்பது எப்போதும் மேலை நாட்டு ......... அனைத்தையும் வைத்தே நாம் பழகிப் போய் விட்டோம். எது நல்ல உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு நமது ஒப்பிடு எப்போதும் ஐரோப்பிய நாடுகளாகவே ஆகிப் போனதும் சரியல்ல.
- இங்கு உள்ள மக்கள் தொகை, சூழல், நகரங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் நமது பொருளாதார மேம்பாடு என்று சிந்திப்பதில்லை என்பது என் வருத்தமும் கூட.
- முதலாளித்துவ பொருளாதாரத்தை பின் பற்றுகிற மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான இலாபம் ஈட்டுதல் என்கிற ஒன்றும், காரணமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் சிறு வணிகத்தை ஊக்கு வித்ததுதான் அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றெல்லாம் நான் சொல்ல வர வில்லை.
- இதே பிழைப்பை நம் நாட்டைச் சார்ந்த அதி செல்வங்கள் படைத்தவர்கள் முதற்கொண்டு செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அவர்களிடம் இருந்தும் நாம் காப்பாற்றப் பட வேண்டியது அவசியமே!
- சிறு வியாபாரிகள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் யாருமே ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுதான் வழியா?
- இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. ஆனால் சிறு வணிகர்கள் என்றால் மட்டும் எதுவும் தன்னிலேயே ஒருங்கிணைப்பதற்கு அரசு முயற்சி எடுக்கக் கூடாதா? இவைகள் எல்லாமே சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?
- அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அதே ஆர்வத்தை நம் மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகம் நேரடியாகப் பயன்பெறும் வண்ணமும் அதில் நேரடி ரேவேன்யுவை அரசுக்குக் கொண்டு வரும்படிஎல்லாம் செய்ய முடியாதா. என்ன - அரசியல் வாதிகளும், வல்லுனர்களும், நம் மக்களும் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும்.
- டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?
கொசுறு இரண்டு
பல கேள்விகளை கடந்த பதிவில் விதைத்த வௌவால் அவர்களுக்கு நன்றி. அதனாலேயே இந்தப் பதிவு. வருத்தம் என்னவென்றால் அவர் கேட்டது போல பொருளாதார விளக்கங்களை நான் கூற வில்லை; அது இந்தப் பார்வைக்கு தேவையற்றது என்கிற எனது [தவறான !] எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
கொசுறு மூன்று
நேரம் கிடைக்குமெனில் அந்நிய முதலீட்டில் உள்ள நன்மைகளையும் பற்றி எழுதலாம். பரந்து பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். ஆனால் அதை நண்பர்கள் பலர் செய்கிறார்கள்.
வௌவாலின் பதிவு
வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்
ரேவேரியின் பதிவு
அழியப் போகும் சிறு வணிகர்கள்
ஜீவானின் கேள்வி
இது சரியா
11 comments:
//
டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?//
சரியான கேள்வி
உங்கள் பார்வைக்கு இன்று
அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?
என்னத்தை சொல்ல அப்பு..?
உங்கள் ஆதங்கம் நியாயமானதே...கேள்விகளும்...
நன்றி தோழரே இணைப்புக்கு...
வணக்கம் நண்பரே,
நான் சொன்னதை பாசிடிவாக எடுத்துக்கொண்டமைக்கு முதல் நன்றி!இணைப்புக்கும் நன்றி! எதையும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் அற்றுப்பார்த்தால் எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்கும். உங்கள் பார்வையை வைத்துள்ளீர்கள், அதிலும் சில கேள்விகள் இருக்கின்றன.
//சிறு வியாபாரிகள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் யாருமே ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுதான் வழியா?//
சிறிவியாபாரிகள் அனைவரும் கெட்டவர்கள் என்றோ, ஏமாற்றுக்காரர்கள் என்றோ நானும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறார்கள் என்பதே எனது ஆதங்கம்.
அந்நிய முதலீடு மட்டும் சரி என சொல்லவில்லை. சுமார் 50-60 ஆண்டுகளாக இந்திய சில்லரை வர்த்தகம் இப்படியே தானே இருக்கு, ஆரசு எதாவது செய்திருக்க வேண்டும் செய்யவில்லை, செய்ய சொல்லி யாரும் போராடவும் இல்லையே? ஏன்?
எல்லா சிறு வணிகர்களும் கணினி, இணையம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு சட்டம் போட்டால் கேட்பார்களா? உடனே அதற்கும் ஒரு போராட்டம் அல்லவா வந்திருக்கும்.
சிஎம்டிஏ அனுமதிக்கும் மேலாக கட்டிடம் கட்டியதால் சீல் வைத்தால் அதற்கும் அல்லவா போராடுகிறார்கள்.அரசாங்கம் செய்ய வந்தால் விடுவதில்லை. அவர்களுக்கு தெரிந்த எளிவ வழியில் ஒட்டு மொத்தமாக ஆப்பு வைக்கிறார்கள் இப்போ?
//அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அதே ஆர்வத்தை நம் மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகம் நேரடியாகப் பயன்பெறும் வண்ணமும் அதில் நேரடி ரேவேன்யுவை அரசுக்குக் கொண்டு வரும்படிஎல்லாம் செய்ய முடியாதா. என்ன - அரசியல் வாதிகளும், வல்லுனர்களும், நம் மக்களும் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். //
கண்டிப்பாக செய்ய முடியும் நண்பரே , அரசும் முன்வர தயங்குகிறது, மக்களும் ,வியாபாரிகளும் எப்படியாவது ஏமாற்றவே பார்க்கிறார்கள். இந்நிலைக்கு காரணம் மக்களாக நாமும் தான்.
//இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. ஆனால் சிறு வணிகர்கள் என்றால் மட்டும் எதுவும் தன்னிலேயே ஒருங்கிணைப்பதற்கு அரசு முயற்சி எடுக்கக் கூடாதா? இவைகள் எல்லாமே சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?//
எனது பதிவிலும் அம்பாசிடர், கிங்க் பிஷர் பற்றி குறிப்பிட்டு இருந்தேன், கிரிக்கெட் வாரியமும் அப்படித்தான் , பெரியவங்க செய்தால் தனி மரியாதை தான்!
//டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?//
ஹி..ஹி... இத எப்படி நீங்க ஒரு உதாரணமாக சொல்ல முன்வந்தீர்கள் என்றே புரியவில்லை.
டாஸ்மாக்கிற்கு முன்னர் தனியார் வைன் ஷாப்புகள் இருந்துச்சு. டாஸ்மாக் வந்த பிறகு இருக்கா? அப்போ சில்லரைக்கடைகளை அரசுடமையாக்கிட்டு வேற யாரும் வணிகம் செய்யக்கூடாதுனு சொல்லிடலாமா? அப்படி செய்ய எனக்கும் ஆசை தான்!
அரசு மட்டும் டாஸ்மாக் போல செய்யப்போவதாக அறிவிக்கட்டுமே அப்புறம் என்ன நடக்கும்னு நீங்களே பார்ப்பீங்க, அதைக்கண்டித்து பதிவும் போடுவிங்க!
நீங்க தான் தவறான உதாரணம் காட்டிடிங்க சரி, அதை ஒருத்தர் ஆகா அருமைசரியான கேள்வினு சொல்றார் , இப்படித்தான் என்ன சொன்னாலும் ஒன்னு சரி என்பார்கள் இல்லை தவறு என்பார்கள், ஏன்,எதற்கு ,எப்படிலாம் கேள்விக்கேட்காத மந்தைகள் தான் நம்ம மக்கள்!அதுல நானும் ஒருத்தன் தான்! (அப்போ அப்போ சொரணை வந்து கேள்விக்கேட்பேன் அவ்ளோதான்)
உங்கள் பதிவின் அடிப்படையில் இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு பதிவுப்போடுறேன்(விரைவில்)
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி...
@MANO நாஞ்சில் மனோ
என்ன வேணும்னாலும் சொல்லுங்க!
@ரெவெரி
நன்றி நண்பரே
@வவ்வால்
பதிவிடுங்கள்...
கருத்துக்களைப் பகிர்வோம்.
சில கருத்துக்களில் என் நக்கல் இருக்கும் - பல சமயங்களில் அதுவே எனது கருத்து என்று ஆகிப் போகிறது. மற்றபடி ஒன்றுமில்லை.
அரசின் அதிகார அடக்கு முறை - சரியல்ல என்று நினைப்பவன்தான். அதற்காக அரசு செய்கிற எல்லா விஷயங்களையும் தவறு என்று அதன் மேல் வெறுப்பு காட்டவும் மாட்டேன். தங்களது சுய இலாபமின்றி அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். அவ்வளவே. சில அரசு விதிகளை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவறு என்று பதிவிட மாட்டேன் - சிலர் மீது மட்டும் எடுத்து பலரை கண்டு கொள்ளாமல் இருந்தால் பதிவிட்டுத் தானே ஆக வேண்டும்.
தொடர்ந்து விவாதிப்போம். நம் விவாதம் காரணமாக பல புதிய வழிகள் புலப்பட்டால் மகிழ்ச்சியே. நம் மக்களுக்கும் நமக்கும் நன்மை பயக்குமல்லவா!
சில தவறான புரிந்துனர்தல்களுக்கு விடை சொல்கிறது இப்பதிவு .நன்றி நண்பரே,
பகிர்வுக்கு நன்றி... நண்பரே
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்