நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு தேவை என்பதாகவும் அது மட்டுமல்லாமல் இப்படி மட்டும்தான் நாடு முன்னேற முடியும் என்கிற மாயையும் நம் மனதில் விதைக்கப் படுகிறது.
முதலாளித்துவத்தின் அடிநாதம் என்பது லாபம் என்பதும் அதனால் அது எத்தகைய செயலையும் செய்யும் என்பது கண்கூடு. மேற்கத்திய பொருளாதாரம் என்கிற அவர்களின் தவறான கொள்கைகள் பலவற்றை நாம் எந்த வித மறு பரிசீலனையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு பெருத்த அவமானம். அவமானம் என்பதை விட நமது நாட்டை அடமானம் வைக்கிற செயல். முதலீடுகள் இங்கே வர அவைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஒவ்வொரு முறையும் அந்நிய முதலீடும், போட்டியும் [காம்பெடிஷன்] வந்தால் விலை குறையும் என்பதுதான் அவர்களது வாதம். அது எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது விலை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்னும் முழு அளவில் அந்நிய முதலீடுகள் இல்லாததுதான் இதற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டு இன்னும் முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அதிகப் படுத்தும் முட்டாள்தனத்தை விட வேறு கொடுமை ஒன்று இருக்க முடியாது. என்ன கொடுமை சார்?
ஒரே ஒரு கேள்வி...
ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்.. நீங்க இன்னும் சிவப்புக் கம்பள விரிப்பைப் போட்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். இதைச் சொல்லுவதால் எங்களைப் பழம் பெருச்சாளிகள் என்று நினைத்தாலும் அதற்காக கவலைப் படப் போவதில்லை. நமது நாட்டை நினைத்துத் தான் கவலைப் பட வேண்டியிருக்கிறது.
நன்றி - வார்த்தைகளை விட கார்டூன் பேசுமல்லவா - நன்றி தினமணி மற்றும் மதி.
22 comments:
பொருளாதாரம் குறித்த பார்வை பலருக்கும் குறைவாக இருப்பதே இந்த பிரச்சினை என்று நினைக்கிறேன்... நாளை விரிவாக மாறுபட்ட கோணத்தில் இந்த பிரச்சினையை அலச இருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
எனக்கும் சரியா புரியவில்லை...!!!
கடைசி கார்டூன் உண்மை ..
இன்றைய ஸ்பெஷல்
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
அவசியமான பதிவு...
ஒரே ஒரு கேள்வி...
ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்..
//
நல்லா கேட்டிங்க,
நம்ம நாட்டு மக்கள்தொகை அவங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.அதான் பிரசாதம் வாங்க வரிசை கட்டி நிக்குறாங்க.
தினமணி டூண் செம,
செமையா பொருந்துது
உணர்ச்சிகரமான மேடைப்பேச்சாக இருக்கு உங்கள் வாதம், ஒரு பொருளாதாரக்கண்ணோட்டத்தோட எதுவுமே விளக்கப்படவில்லை.
//ஒரே ஒரு கேள்வி...
ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்?//
பொருளாதார வீழ்ச்சிக்கு இது போன்ற முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் தான் காரணமா? அது எப்படினு விளக்க முடியுமா?
இந்தியாவில முறைசாரா சில்லரை வர்த்தகர்கள் 97% அவங்க பெரும்பாலும், சேவை வரி, வணிகவரி, வருமான வரினு முறையாக்கட்டுவதே இல்லையே, அப்போ அது மட்டும் நாட்டுக்கு நல்லதா?
ரஷ்யாவில் 90 இலேயே பொருளாதாரம் சரிஞ்சு போச்சு அப்போ கம்யூனிசம் தோல்வினு சொல்விங்களா? அவங்க நாட்டிலே பொருளாதாரத்த மேம்படுத்தாத கம்யூனிசம் எப்படி நம்ம நாட்டில வாழ வைக்கும்?
ஹி..ஹி...இத சொன்னதுக்காக என்னை ஏகாதியபத்தியவாதி சொல்லிடாதிங்க , நான் எந்த வாதியும் இல்லை, எதார்த்தவாதினு வேண்டுமானால் சொல்லிக்கலாம்.
இந்த பதிவுகளை படிச்சுப்பாருங்க,
வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்
வால்மார்ட்,கம்மோடிடி,செயற்கைத்தட்டுப்பாடு
@suryajeeva
வணக்கம்,
பொருளாதாரம் நிச்சயமாய் புரியாத புதிர்தான். இப்படித்தான் இருக்கும் ... இது அதைக் கொண்டு வரும் என்றெல்லாம் அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது என்றே நினைக்கிறேன்.
தொடர்ந்து அதைப் பற்றி அலசுவதற்கான நேரம் எனக்கு இல்லை. வாய்ப்பும் நேரமும் கிடைக்குக் போது பார்க்கிறேன். நிச்சயம் உங்கள் பதிவைப் படிக்கிறேன்.
@நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றி...
நண்பரே.
@MANO நாஞ்சில் மனோ
எனக்கும் புரியலைதான்.
புரியாமலே புரிந்த மாதிரியெல்லாம் எழுதலை.
இப்படியே போனால் எப்படி ஆகும் என்கிற கேள்விதான்..
@"என் ராஜபாட்டை"- ராஜா
கார்டூன் உபயம் தினமணி.. நன்றி அவர்களுக்கே
@ராஜா MVS
நன்றி..
எனக்கு நேரமின்மை காரணமாக திரட்டிகளில் இணைக்க முடியவில்லை. இணைத்ததற்கு நன்றி...
@கோகுல்
அதாவது அவர்களைப் பொறுத்தவரை குறைந்த பணத்தில் நிறைய வருமானம் பார்ப்பது என்பதுதான் எனது புரிதல். ஆனால் அது எல்லா முதலாளிகளிடமும் உண்டு. நம்ம ஊர் முதலாளிகள் உட்பட..
@வவ்வால்
வணக்கம். வருகைக்கும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
//////////உணர்ச்சிகரமான மேடைப்பேச்சாக இருக்கு உங்கள் வாதம், ஒரு பொருளாதாரக்கண்ணோட்டத்தோட எதுவுமே விளக்கப்படவில்லை./////////
உண்மைதான். பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு விளக்க முடியவில்லை. அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் தவறாக நினைத்தது ஒரு காரணம். அதைத் தாண்டி நேரமின்மை என்பது அடுத்த காரணம்.
உங்கள் பதிவுகளைப் படித்தேன். மிக நீண்ட மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்.
@வவ்வால்
//////பொருளாதார வீழ்ச்சிக்கு இது போன்ற முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் தான் காரணமா? அது எப்படினு விளக்க முடியுமா?//////
எனது பதிவின் நோக்கம் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் மட்டும் இல்லை. தலைப்பு அதைப் பற்றியது மட்டும் என்று கூறுவது போல உள்ளது தவறே. மாறாக ஒட்டு மொத்த முதலளித்துவ அமைப்பின் தற்போதைய வடிவம்.
மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் தனது கருத்தமைவைக் கட்டமைத்த காலத்தில் அவைகள் மிகப் பெரிய விடுதலை கூறுகளை உள்ளடக்கிய சக்தியாக இருந்தது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் என்பது முற்றிலும் மோசமானது என்று நான் நினைப்பதில்லை. அரிச்டோக்ராட்ஸ் என்ற மேட்டிமைக் குடியினர் மட்டும் மதிக்கப் பட்ட காலத்தில், சமுதாயத்தில் அனைவரும் சமத்துவம் மிக்கவர்களாக மதிக்கப் பட இது மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என்று மறுப்பதற்கில்லை.
ஆனால் நாளாவட்டத்தில் இதுவே மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதனால் கம்யூனிசம் சரி என்றோ அதுதான் மாற்று என்பதெல்லாம் என் கருத்து அல்ல.
ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் உருவான நவீனம் அல்லது வளர்ச்சி என்பது அப்படியே இன்னோர் இடத்தில் சொருக வேண்டும் - சொருக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் அது மிக நன்றாகத் தெரிந்தாலும் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே தனது சுய ரூபத்தைக் காட்டும்.
அடுத்து நவீனம் அல்லது சமூக வாழ்வு மேம்பாடு என்பது எப்போதும் மேலை நாட்டு ......... அனைத்தையும் வைத்தே நாம் பழகிப் பொய் விட்டோம். எது நல்ல உயர்ந்த்த வாழ்க்கை என்பதற்கு நமது ஒப்பிடு எப்போதும் ஐரோப்பிய நாடுகளாகவே ஆகிப் போனதும் சரியல்ல.
இங்கு உள்ள மக்கள் தொகை, சூழல், நகரங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் நமது பொருளாதார மேம்பாடு என்று சிந்திப்பதில்லை என்பது என் வருத்தமும் கூட. அது தவறு என்று நான் கருதுகிறேன்.
முதலாளித்துவ பொருளாதாரத்தை பின் பற்றுகிற மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான இலாபம் ஈட்டுதல் என்கிற ஒன்றும், காரணமாக இருக்கலாம். மறுபடி அவர்கள் சிறு வணிகத்தை ஊக்கு வித்ததுதான் காரணம் என்றெல்லாம் நான் சொல்ல வர வில்லை.
இதே பிழைப்பை நம் நாட்டைச் சார்ந்த அதி செல்வங்கள் படைத்தவர்கள் முதற்கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
///////இந்தியாவில முறைசாரா சில்லரை வர்த்தகர்கள் 97% அவங்க பெரும்பாலும், சேவை வரி, வணிகவரி, வருமான வரினு முறையாக்கட்டுவதே இல்லையே, அப்போ அது மட்டும் நாட்டுக்கு நல்லதா?/////
சிறு வியாபாரிகள் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுத்தான் வழியா?
இந்தியக் கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. இவைகள் எல்லாமே சிறு வர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?
@வவ்வால்
////ரஷ்யாவில் 90 இலேயே பொருளாதாரம் சரிஞ்சு போச்சு அப்போ கம்யூனிசம் தோல்வினு சொல்விங்களா? அவங்க நாட்டிலே பொருளாதாரத்த மேம்படுத்தாத கம்யூனிசம் எப்படி நம்ம நாட்டில வாழ வைக்கும்?////
நான் அப்படித்தான் கருதுகிறேன். ரஷ்ய கம்யூனிசம் என்கிற அதன் போக்கில் பல தவறுகள் உண்டு என்றே நினைக்கிறேன். அதே கம்யூனிசச் சித்தாங்கள் அதில் உள்ளபடியே நமது நாட்டிற்கு ஒத்து வராது என்று கருதுகிறேன். ஆனால் பல கம்யூனிஸ்டுகள் இன்னும் சித்தந்தங்களில் உள்ள உறுதிப்பாட்டை மக்களின் மேம்போக்கில் காட்ட வேண்டியது அவசியம்.
////ஹி..ஹி...இத சொன்னதுக்காக என்னை ஏகாதியபத்தியவாதி சொல்லிடாதிங்க , நான் எந்த வாதியும் இல்லை, எதார்த்தவாதினு வேண்டுமானால் சொல்லிக்கலாம்..../////
நான் நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் பதிவுகளையும் அதற்கு மேலும் படித்தேன். இங்கே பின்னூட்டம் இட்டுள்ளதால் அங்கேயும் இடுவதற்கான நேரம் இருக்காது என்பதனால் அங்கே எழுத முடியவில்லை.
நிச்சயமாய் நீங்கள் ஏகாதிபத்திய விரும்பி இல்லை என்பது நீங்கள் விவசாயிகள் மேல் கொண்டுள்ள அக்கறை வெளிப் படுத்துகிறது. நானும் அதே போல ஒரு எதார்த்த வாதிதான்.
எதார்த்த வாதிகளின் கருத்துகள் ஒரே மாதிரித் தான் இருக்க வேண்டுமா என்ன.
என்னைப் பொறுத்த வரை - கருத்து விவாதங்கள், பரிமாற்றங்கள் தான் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற என்ற ஒன்றை புத்தியைக் கண்டு பிடிக்கவும் கையாளவும் செய்யும் இல்லையெனில், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நாம் இருக்கிற அந்த ஒரே வழி என்று அதைத் தான் பின்பற்றிக் கொண்டிருப்போம்.
......
மன்னிக்கவும் - நீங்கள் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்தப் பின்னூட்டத்திலும் பொருளாதாரக் கூறுகளை வைத்து விளக்க முடியவில்லை. ஆனால் எனது விவாதத்திற்கு அது தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
மீண்டும் நன்றி.
நேரம் கிடைக்குமெனில் விவாதிப்போம்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
அருமையான பதிவு.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி சார்.
@Rathnavel
ஐயா, மிக்க நன்றி,
உங்கள் பகிர்வின் மூலம் இன்னும் சிலரையும் சென்றடைந்தால் நல்லது.
உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்