14.1.14

பொங்கல் வாழ்த்துகள்


  • கா. கவிதை


மூன்று மணி நேரம் வெந்நீர்
மூன்று மணி நேரம் குளிர் நீர்
மாறி மாறி குளித்தேன் நான்- [இரு முறை வாசிக்க]

நெருப்பாய் சிறிது நேரம்
எரிந்தது என் உடல்
பனியாய் சிறிது நேரம்
குளிர்ந்து என் உடல் - [இரு முறை வாசிக்க]

திடீரெனப் பார்த்த பெண்ணின்
மீதான காமமும் காதலும்
நெருப்பாய் பனியாய் வாட்டுதா?
---
பெரிதாய் ஒன்றும் சிந்திக்காதீர்கள்
பெயர் தெரியாத
ஒரு வைரசின்
காய்ச்சல்
என்னை
மாறி மாறி வாட்டுது.

இன்றுதான் சற்றே ஆறுதல்!

போகியில் காய்ச்சல் போய்
பொங்கலில் புது வாழ்வு
--
எல்லாருக்கும் வாழ்த்துகள்
........................

  • பொ. பொன்மொழி (கேட்டது)

தன் மொழியை உயர்வாய் சொன்னால் அதை நம்பாமல் கேலி செய்வதும்
தன் மொழியை இழிவாய்ச் சொன்னால் அதை ஏற்று ரசிப்பதும்
தமிழகத் தமிழர்கள்.

பிறன் மொழியை உயர்வைச் சொன்னால் அதை நம்பி ஏற்பதும்,
அம்மொழியின் பிழைகள் சொன்னால் தற்காத்து விவாதிப்பதும்
தமிழர்கள் தான்
ஏனெனில்
நாம்தான்
நடு நிலையானவர்கள்
அதனால்தான்
நாம்
பட்டி மன்றத்துக்கு பெயர் போனவர்கள்
-- -- -- -- -- --
வடிவேலுவின் பாணியில் சொல்வதென்றால்
நம்ம குடும்பத்தை
நாமலே கேவலமா பேசி
கிண்டலடிப்பதை
ஒரு வழக்காமாகவே
வச்சிருக்கோம்.
வாழ்க
நம் வீரப் பழக்கம்
​​​​ ______

 பொங்கல் வாழ்த்துகள்
மண்ணை நேசிக்கும் பழக்கம் இருந்தால்தான்
இனி வரும் காலங்களில்
பொங்கல் கூட கொண்டாட முடியும்...

இல்லையென்றால்
பொங்கல் செய்வது எப்படி
தொலைக் காட்சி
நிகழ்ச்சிகளில் தான்
பார்க்க முடியும்.

----


7 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…[பதிலளி]

பொங்கல் வாழ்த்துகள்
மண்ணை நேசிக்கும் பழக்கம் இருந்தால்தான்
இனி வரும் காலங்களில்
பொங்கல் கூட கொண்டாட முடியும்...

இல்லையென்றால்
பொங்கல் செய்வது எப்படி
தொலைக் காட்சி
நிகழ்ச்சிகளில் தான்
பார்க்க முடியும்.//

உண்மையை விளக்கிய சிறந்த வரிகளுக்கு பாராட்டுக்களும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களும் சகோதரா .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

Appu U சொன்னது…[பதிலளி]

@அம்பாளடியாள் வலைத்தளம்

சகோதரிக்கு,
தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

Appu U சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்
வணக்கம்.

இந்தப் புதிய ஆண்டு இன்னும் நிறைய உயர்வைக் கொண்டு வரட்டும்.

Appu U சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு

வணக்கம்.

இந்தப் புதிய தை எல்லாருக்கும் நல்லாண்டாய் அமைய வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…[பதிலளி]

பொங்கலில் புது வாழ்வு மலரட்டும் ..!

தித்திக்கும் இனிய பொஙல் நல்வாழ்த்துகள்..!

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்