12.10.11

பாசக்கார நண்பர்களே - நேரம் ஒதுக்குங்கள்


நேற்று ஒரு மின்னஞ்சல் வரப் போய் அதன் சாரம் எல்லாருக்கும் பயன்படட்டுமே என்று இந்தப் பதிவு. 

நமது உலகில் ஒருவர் மற்றவருக்காக நேரம் செலவிடுதல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் நமக்காகப் பலர் செலவழித்த நேரங்கள் தான் நம்மை நாம் இருக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 
அப்படி நமக்கு நேரம் செலவழித்தவர்களுக்கு மீண்டும் நாம் நேரம் செலவிடுவதுதானே தருமம்.
உடனிருந்த அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்... நேரம் செலவிட பிள்ளைகள் தயாராக இருந்தால் இன்றைக்கு முதியோர் இல்லங்களே தேவையில்லை.. 
ரொம்ப சீரியசான பதிவாக மாற்ற விரும்பவில்லை.
உறவுகளுக்கு - குறிப்பாக நமக்காக நேரம் செலவழிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்...

நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு - ஒன்றுமில்லாமல் வந்தோம் ஒன்றும் இல்லாமலலேயே போகப் போகிறோம். இதில் இடைப் பட்ட காலத்தில் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல்வேறு நபர்களின் பங்களிப்பு. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்த்திருக்கிறோம் என்பதே கேள்வி. எத்தனை நபர்களுக்கு நன்றி என்று உள்ளத்தால் இல்லாவிடினும் உதட்டளவிலாவது சொல்லியிருப்போம்.
உயிரைக் கொடுத்த அம்மா, உலகைக் காட்டிய அப்பா, சேர்ந்து வளர்ந்த சகோதரங்கள், கல்வி கொடுத்த ஆசிரியர்கள், உணர்வு கொடுத்த நண்பர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால் அவர்களுக்கு நன்றி என்று சொன்னோமோ என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நன்றி சொல்லி அவர்களை அன்னியப் படுத்துவது அல்ல விஷயம். அவர்களுக்காக நாம் எப்படி நேரம் செலவிடுகிறோம் என்பதிலும் இருக்கிறது. 

காலம் மிக வேகமாகப் பயணிக்கும் காட்டாறு போன்றது. யாருக்கும் செவிசாய்க்காத அலை போன்றது. பல நேரங்களில் நாம் அதை உணர்வதற்கு முன்பே பல ஆண்டுகளைக் கடந்து விட்டிருப்போம். செங்கோவி இனிமேல் சனி ஞாயிறுகளில் பதிவுலகின் பக்கம் வருவதில்லை என்றும் தனது உறவுகளுக்கான நேரம் என்று வார இறுதி நாட்களுக்கு தனது வலைப்பூவிற்கு விடுமுறை கொடுத்த பாசம் - அந்த நியாயமான பாசமும் எல்லாரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியம். [அதுக்காக எல்லாரும் ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டுறாதிங்க].

இருக்கும் போது இல்லாமல் இருந்துவிட்டு - காலம் கடந்த போது இருக்க நினைத்தால்  அது நிகழாமலே போகலாம். எனவே உடனே, இன்றே, இப்போதே, இப்பவே....
 ....

சில மாதங்களுக்கு முன்பு பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த என் ஆசிரியர் ஒருவரது மின்னஞ்சலின் முகவரியைக் கண்டு பிடித்து அவருக்கு நன்றி சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து பதிலும் கூட. மனதுக்கு மிக நெருக்கமான தருணங்கள் அவை. 

வாழ்வில் இது போன்ற தருணங்கள் மிக அற்புதமானவை. அது எல்லாருக்கும் வாய்க்கும் என்றே கருதுகிறேன். 
....
"கலைஞர் - கனிமொழியை" மனதில் வைத்து இப்பதிவு எழுதப் படவில்லை.

8 comments:

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

பாசத்திற்காக நேரத்தை ஒதுக்குவோம்.. அழகாக சொன்னீர்கள்... அன்புக்கு முக்கியதுவம் கொடுப்போம்.. பகிர்வுக்கு நன்றி சகோ

Unknown சொன்னது…[பதிலளி]

ராஜேஷ் - வணக்கம்.
வேகமாப் போற உலகத்தில கொஞ்சம் நின்னு அப்படியே எல்லாருடம் கூட இருந்துட்டுப் போறது சுகம்தானே

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

the best gift a man can give is time...

கடைசியா அது என்ன அப்புவின் ஆப்பா?

Unknown சொன்னது…[பதிலளி]

///கடைசியா அது என்ன அப்புவின் ஆப்பா? ///

ஜீவா, சிலர் அப்படி நினைக்க வாய்ப்பு இருப்பதால் ... அது ஆப்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

Minmalar சொன்னது…[பதிலளி]

நன்றி

Unknown சொன்னது…[பதிலளி]

மின்மலர், வந்ததற்கும், தங்கள் நேரத்தை இந்த வலைப் பூவில் உறவாட செலவழித்ததற்கும் மிக்க நன்றி.

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

உ ண்மைதான் ஐயா .காலம் ஓடும் வேகத்தில் நாம் இழந்த சுகங்கள் ஆயிரம் .அதில் உறவுகளோடு ,நண்பர்களோடு நாம் கலந்து பேசி வாழும் அந்த பொன்னான நேரமும் உணர்வுகளும் அடங்கும் .
நீங்கள் குறிப்புட்டுள்ள இந்த பயனுள்ள விடயம் அனைவரும் அறியவேண்டிய ஒன்று .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...................

Unknown சொன்னது…[பதிலளி]

அம்பாளடியால் - வணக்கம்.
உறவுகள்தானே மிக முக்கியம்... அவைகள் இல்லையென்றால் வாழ்கையே இல்லையே..

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்